ETV Bharat / bharat

செவ்வக தோசை சாப்பிட ரெடியா..! உலகின் முதல் ஸ்மார்ட் தோசை மேக்கர்..! - EVOCHEF branches in tamilnadu

ஸ்மார்ட் கிச்சன் ஆட்டோமேஷன் நிறுவனமான EVOCHEF, உலகின் முதல் ஸ்மார்ட் தோசை மேக்கர் எந்திரத்தை தயாரித்துள்ளது. இதுபற்றிய முழு விவரத்தை காணலாம்.

செவ்வக தோசை சாப்பிட ரெடியா? சந்தையில் வந்துள்ள ஸ்மார்ட் தோசை மேக்கர்..

author img

By

Published : Oct 21, 2022, 9:03 AM IST

சென்னை: EVOCHEF என்ற ஸ்மார்ட் கிச்சன் ஆட்டோமேஷன் நிறுவனம்தான் இந்த ‘EC FLIP' என்ற ஸ்மார்ட் தோசை மேக்கரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் தோசையை தயார் செய்வதான் மூலம், நேர விரயம் குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எந்திரத்தினுள் தேவையான மாவை வைத்து, பட்டனை பிரஸ் செய்தால் போதும் சில நொடிகளில் தோசை வந்துவிடும். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இதுவரை வட்ட வடிவில் மட்டுமே தயார் செய்து சாப்பிட்டு வந்த தோசையை, இனி செவ்வக வடிவில் தயார் செய்யலாம்.

இதற்காக பிரத்யேக அச்சு பிளேட்கள் ஸ்மார்ட் தோசை மேக்கரான EC FLIPஇல் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சாதாரணமான அரிசி மாவு மட்டுமின்றி, தானியங்கள், ஓட்ஸ், ரவை, கோதுமை போன்ற மாவுகளையும், சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட காய்கறிகளையும் இணைத்தே தோசையை தயார் செய்யலாம்.

இந்த மேக்கரை வாங்கும்போது, ஒரு துண்டிக்கக்கூடிய பிளேடு, ஒரு ஸ்பேட்டூலா , எண்ணெய் கலன், ரோலரை சுத்தம் செய்வதற்கான ஸ்கிரப்பர், இடி பிரிப்பான்கள், மூடியுடன் கூடிய 700 மிலி பேட்டர் டேங்க், சேகரிக்கும் தட்டு, ஒரு உள்ளடக்க கையேடு மற்றும் வாரண்டி அட்டை ஆகியவை இருக்கும். இதுகுறித்த தெளிவான விளக்கங்களுக்கு சென்னை அடையாறு மற்றும் இந்திரா நகரில் உள்ள EVOCHEF கிளைகளிலோ அல்லது EVOCHEFஇன் அதிகாரப்பூர்வ இணையதளமான evochef.in லும் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: பட்டனை தட்டினால் கையில் சுட சுட இட்லி... ஏடிஎம் முறையில் இட்லி விற்பனை... அசத்தல் எந்திரம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.