முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாடு அரசுத் துறைகளின் புதிய அறிவிப்புகள், ஏற்கெனவே உள்ள திட்டங்கள், நிதி ஆதாரம் ஆகியவை குறித்து அனைத்து துறை செயலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.16) காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
ராகுல் காந்தி பெங்களூரு வருகை
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி இன்று (செப்.16) பங்கேற்கிறார்.
நெல் கொள்முதல் இணையதள முன்பதிவு தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வரும் செப் 30ஆம் தேதி வரை நெல் கொள்முதல் செய்வதற்கான இணையதள முன்பதிவு இன்று (செப் 16) தொடங்குகிறது
நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு
இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை, நிதி ஆயோக் இன்று (செப்.16) வெளியிடுகிறது.