நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்
![நிமோனியா தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12554728_vacci.jpg)
குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்கும் நியூமோகாக்கல் என்ற தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் சென்னையில் தொடங்குகிறது.
உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு விண்ணப்பம்
![உடற்கல்வியியல் பல்கலைக்கழகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12554728_spor.jpg)
தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைகழகத்தில் சேர விருப்புபவர்கள் இன்று (ஜூலை 24) முதல் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் வி.கோபிநாத் தெரிவித்துள்ளார்.
சிஐஎஸ்சிஇ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
![தேர்வு முடிவு வெளியீடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12554728_resul.jpg)
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சி.ஐ.எஸ்.சி.இ., ஐ.சி.எஸ்.இ., 10 மற்றும் 12ஆம் ஐ.எஸ்.சி., வகுப்பு பொதுத் தேர்வு முடிவை கணக்கிட்டு அதற்கான பணிகளை நிறைவு செய்திருந்த நிலையில், இன்று (ஜூலை 24) பிற்பகல் 3 மணிக்கு தேர்வு முடிவு வெளியாகிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் இன்றைய ஆட்டம்
![தமிழ்நாடு பிரிமீயர் லீக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12554728_tnpl.jpg)
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (ஜூலை 24) மாலை 3.30 மணிக்கு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகின்றன. அதேபோல் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்
![டோக்கியோ ஒலிம்பிக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12554728_toki.jpg)
டோக்கியோ ஒலிம்பிக்கின் 2ஆம் நாளில் (ஜூலை 24) பத்து போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் இன்று (ஜூலை 24) போட்டியிடுகின்றனர்.