ETV Bharat / bharat

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

author img

By

Published : Sep 23, 2021, 7:06 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

7AM
7AM

1. 'மனசாட்சியின்றிச் செயல்படும் ஊடகங்கள்; அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிட அச்சம்!'

'நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதை யாரும் செய்தி வெளியிடுவதில்லை. தொலைக்காட்சிகள் மனசாட்சியின்றிச் செயல்படுகின்றன. அரசுக்கு எதிராகச் செய்தி போட பயப்படுகின்றன' என்று எடப்பாடி பழனிசாமி ஊடகச் செயல்பாடு குறித்த தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2. கோடநாடு வழக்கு - இருவரிடம் தனிப்படையினர் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8, 9ஆவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் கூடுதல் விசாரணைக்கு ஆஜராகினர்.

3. பயணிக்குச் சில்லறை கொடுக்காத பேருந்து நடத்துநர் - போக்குவரத்துக் கழகத்திற்கு அபராதம்

அரசுப் பேருந்தில் சென்ற பயணிக்குச் சில்லறை கொடுக்காத நடத்துநர் தொடர்பான விவகாரத்தில் முறையான பதிலளிக்காத அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மாநில தகவல் ஆணையம் மூன்றாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

4. வடகிழக்குப் பருவமழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு துரிதமான முறையில் எடுத்துவருவதாகப் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

5. கொடுமை: 7 ஆண்டுகளாக கழிவறையில் குடும்பத்துடன் வசிக்கும் பெண்

கன மழையால் வீடு சேதமானதையடுத்து ஏழு ஆண்டுகளாக பெண் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகள், மாமியாருடன் ஒரு சிறிய கழிவறையில் வசித்துவரும் கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6. காண்டாமிருக கொம்போடு ட்ரோனையும் எரித்த முதலமைச்சர்

காண்டாமிருக கொம்புகளை எரிக்கும் அஸ்ஸாம் மாநில அரசின் நிகழ்வில், அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்ரோன் இயந்திரத்தை நெருப்பில் செலுத்தி விபத்துக்குள்ளாக்கினார்.

7. இங்கிலாந்தில் கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிப்பு

இங்கிலாந்தில் கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8. கோயில் நிலங்களுக்கான வாடகை குறித்து உயர் நீதிமன்றம் புது உத்தரவு

குத்தகைக்கு விடபட்டும் கோயில் நிலங்களுக்கான வாடகையை, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

9. நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை பிணை

நடிகை மீரா மிதுன், அவரது நண்பருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10. IPL 2021: ஹைதராபாத் அணியை அடிச்சுத் தூக்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!

ஐபிஎல் 2021 தொடரின் 33ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.