ETV Bharat / bharat

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 pm

author img

By

Published : Oct 7, 2021, 5:20 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

5 pm
5 pm

1. ’விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக’ - இபிஎஸ்

சென்னை: விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

2. 'புலி உறுமுது... புலி உறுமுது': T23 புலியைப் பிடிக்க 13ஆவது நாளாகத் தொடரும் பணி

மசினகுடியிலுள்ள வனப்பகுதிக்குள் டி23 புலியைப் பிடிக்க வனத்துறையினர் 13ஆவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3. எடியூரப்பா நெருங்கிய உதவியாளர் வீட்டில் சோதனை!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் நெருங்கிய உதவியாளர் உள்பட பெங்களூருவில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை (அக்.7) வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.

4. பவானிபூர் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற மம்தா

மேற்கு வங்கம்: பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார்.

5. அணுக்கழிவு விவகாரம்: பிரதமருக்கு டி.ஆர். பாலு கேள்வி!

கூடங்குளம் அணு கழிவுகளைக் கொட்ட தமிழ்நாட்டைத் தவிர வேறு இடம் இல்லையா? எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவை ஒன்றிய அரசு ஏற்காதா என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

6. 2021 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியாவைச் சேர்ந்த அப்துல்ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

7. புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்கலாம்

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அரசு அறிவித்துள்ளது.

8. உலக புகழ்பெற்ற தசாரா திருவிழா தொடக்கம்!

உலக புகழ்பெற்ற தசாரா திருவிழா வியாழக்கிழமை (அக்.7) காலை தொடங்கியது.

9. சஞ்சனா மீது பாய்ந்த மற்றொரு வழக்கு

கார் ஓட்டிநரை தகாத வார்த்தையால் திட்டிய காரணத்திற்காக நடிகை சஞ்சனா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

10. நடிகை யாமி கௌதமுக்கு தோல் நோய்; ரசிகர்கள் சோகம்!

பாலிவுட் நடிகை யாமினி கௌதம் தனக்கு குணப்படுத்த முடியாத தோல் நோய் இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருப்பது, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.