ETV Bharat / bharat

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - tamil news

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

11AM
11AM
author img

By

Published : Sep 29, 2021, 11:29 AM IST

1. இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் வருகை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார்.

2. ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் இல்லை - சீமான்

ஒரு மாநிலத்துக்குள்ளேயே ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதவர்கள், எப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

3. ‘மோரூர் வன்முறைக்கு காவல்துறையே காரணம்’ - திருமாவளவன்

சேலம் மோரூரில் நடைபெற்ற வன்முறைக்கு காவல் துறையின் அணுகுமுறை தான் காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

4. முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் முக்கியமான ரயில்களின் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

5. வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கு தொடரும் தடை

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அக்டோபர் 31ஆம் தேதிவரை தடை தொடர்கிறது.

6. கட்சிக்கு உண்மையாக இல்லாதவர் 'கனையா குமார்' - டி ராஜா தாக்கு

கனையா குமார் ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்மையாக நடந்துகொள்ளவில்லை எனக் கட்சியின் பொதுச்செயாலளர் டி ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

7. கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் பணி நேரம் - அமைச்சர் ஆர். காந்தி விளக்கம்

கோ-ஆப்டெக்ஸில், கந்தாண்டை விட நடப்பாண்டில் 7.70 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி, துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

8. காதலர்களை நிர்வாணமாக்கி நடக்க விட்ட கிராம மக்கள் - ஜார்கண்டில் கொடூரம்

ஜார்கண்ட் மாநிலத்தில் காதலர்கள் இருவரை கட்டாயமாக நிர்வாணப்படுத்தி அவர்களை தெருக்களில் நடக்க வைத்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

9. மண்டலி சிறையில் சலசலப்பு: 1 கைதி மருத்துவமனையில் அனுமதி; 25 பேர் காயம்!

டெல்லி மண்டலி சிறையில் 50-க்கும் அதிகமான கைதிகளால் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கைதி குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10. இணையத்தில் வரவேற்பை பெறும் டாக்டர் தீம் மியூசிக்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' திரைப்படத்தின் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.