குழந்தைகளுக்கான ஈடிவி பால பாரத் தொலைக்காட்சி இன்று முதல் (ஏப்ரல் 27) ஒளிபரப்பாகி வருகிறது. தங்கள் மனதுக்கு நெருக்கமான தாய் மொழியில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையிலான தனித்துவமான நிகழ்ச்சிகள் அதில் ஒளிபரப்பாக உள்ளன. மழலைகளுக்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள், இளம் வயதினரும் பார்த்து ரசிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளன.
முழுக்க முழுக்க உற்சாகம் ததும்பும் நிகழ்ச்சிகள் அனிமேஷன் சீரிஸாகவும் கார்ட்டூன்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தைகளின் மத்தியில் இவை பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.
ராமோஜி ராவ் தொடங்கி வைத்தார்
குழந்தைகளுக்கான இந்த பிரத்யேகத் தொலைக்காட்சியை, ஈடிவி குழும நிறுவனர் ராமோஜி ராவ் இன்று காலை சரியாக 10.35 மணிக்குத் தொடங்கி வைத்தார்.
திகட்டாத மகிழ்ச்சி
குழந்தைப்பருவத்தைக் கொண்டாடும் வகையில் ஸ்டைலிஷாக உருவாக்கப்பட்டுள்ள அபிமன்யு தொடர், அவர்களின் விளையாட்டுத்தனத்தையும் ஆசையையும் தூண்டும் நோக்கில் தயாராகியுள்ளது. அனிமேஷன் கலந்த ஆக்ஷன் சீரிஸாக உருவாகியுள்ள இத்தொடர், திகட்டாத மகிழ்ச்சியை அள்ளி கொடுக்க உள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதையுடனும் கவர்ந்திழுக்கும் கதாபாத்திரங்களுடனும் உலா வரவுள்ள நிகழ்ச்சிகளில் சாகசம் நிறைந்த ஆக்சன் மற்றும் காமெடி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
12 மொழிகளில் பால பாரத்
இத்தொலைக்காட்சியில் வரும் தொடர்கள் பலதரப்பட்ட கதை களத்துடன் மண் சார்ந்த அனுபவங்களையும், பிராந்தியத்தின் சுவையையும் ஒரு சேர வழங்குகின்றன. சாட்டிலைட் தொலைக்காட்சியிலும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் முன்னோடியாக விளங்கும் ஈடிவி நிறுவனத்தின் ஒரு அங்கமாக, ஈடிவி பால பாரத் திகழ்கிறது. ஆங்கிலத்தை தவிர அசாமி, வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஈடிவி பால பாரத் கலக்கி வருகிறது.