ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM - 9 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

9 AM
9 AM
author img

By

Published : Sep 11, 2021, 9:19 AM IST

1. சத்தீஸ்கர் முதலமைச்சரின் தந்தைக்குப் பிணை கிடைத்தது

வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டில் கைதான சத்தீஸ்கர் முதலமைச்சரின் தந்தை நந்த் குமார் பகேலுக்கு பிணை கிடைத்துள்ளது.

2. விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்: அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்று சாலை விபத்தில் சிக்கிய நடிகர் சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

3. ஆபத்தா 100-க்கு அடிங்க... நாங்க வருவோம் - காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு

பொதுமக்களின் அவசர காவல் உதவி தொலைபேசி எண் 100இல் புகார்களைப் பதிவுசெய்தால் சம்பவ இடத்திற்கு குறைந்த நேரத்தில் காவல் ரோந்து வாகனங்கள் சென்று நடவடிக்கை எடுக்க உதவிடும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை காவல் அலுவலர்கள், ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

4. ரூ. 10 லட்சம் மோசடி செய்தவர் வீட்டின் முன்பு இளைஞர் தற்கொலை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் வீட்டின் முன்பு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சூளைமேட்டுப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5. மஜக மாநில நிர்வாகி படுகொலை: தேடுதல் வேட்டையில் 3 தனிப்படை

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகி வசீம் அக்ரம் அடையாளம் தெரியாத கும்பலால் கொலைசெய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வேலூர் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

6. போயஸ் தோட்டத்தில் சசிகலா வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போயஸ் தோட்டத்தில் உள்ள "ஜெய கணபதி" ஆலயத்தில் சசிகலா வழிபாடு நடத்தினார்.

7. களேபரமான கல்யாண வீடு: போதையில் குத்தாட்டம்... 3 பேருக்கு கத்திக்குத்து!

திருமண மண்டபத்தில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

8.பள்ளி திறந்த பின்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் விவரங்களை அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

9.அமெரிக்க-சீனா இடையேயான போட்டி மோதலாகாது - வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் உரையாடினார். இந்த உரையாடலில் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியானது மோதலாக மாறக்கூடாது என்று இருவரும் பரஸ்பரம் வலியுறுத்திக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

10.தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு புதிய தலைவர்

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக இக்பால் சிங் லால்புரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.