1. மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ரஜினி
வரும் 12ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார்.
2.கேரளாவுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட்
ஜூலை 12ஆம் தேதி கன்னூர், காசரகோடுக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும் என நேற்று இந்திய வானிலை ஆய்வு துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
3. கேரளா, மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரிப்பு - விரையும் மத்திய குழு
கேரளா, மகாராஷ்டிராவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அங்கு மத்திய ஆய்வு குழுவை சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
4.'போராடு... அதற்கான உரிமை உண்டு' - உயர் நீதிமன்றம் கருத்து
தங்களின் பொதுத் தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
5. காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சூட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள்
அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் இன்று (ஜூலை 10) நடந்த என்கவுன்ட்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக வந்த தகவலையடுத்து துப்பாக்கி சூடு நடந்த பகுதி அருகே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
6. கோவாக்சின் தடுப்பூசிக்கு 4-6 வாரங்களுக்குள் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்?
கோவாக்சின் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து, இன்னும் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
7.திங்கள்கிழமை முதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வரும் திங்கள்கிழமை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணிவரை இயக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8. சேட்டை செய்த டால்பின்கள்: காணொலி எடுத்த மீனவர்கள்
கடல்வாழ் உயிரினங்களில் கருவாகத் திகழும் மன்னார் வளைகுடா பகுதி, தனுஷ்கோடி முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகளை உள்ளடக்கியதாகும். இப்பகுதியில் பவளப் பாறைகள், ஆமைகள், கடல் பசு, டால்பின்கள் என அரியவகையிலான மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன.
9.'கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா' - சொல்கிறார் மா.சு.
கரோனா மூன்றாவது அலையானது வரக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு அரசின் எண்ணம், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு தற்போது ஈடுபட்டுவருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
10.டெல்லியில் பறிமுதல்செய்யப்பட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான ஹெராயின்!
டெல்லியில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான 354 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்டு, நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.