1. சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளைப் பலப்படுத்திட நிரந்தர திட்டம் - முதலமைச்சர்
சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளைப் பலப்படுத்திட ஒரு நிரந்தரத் திட்டத்தை உருவாக்கிட வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. எந்த குடும்ப அட்டைக்கு ரூ.1000? - விவரம் உள்ளே
குடும்ப அட்டையில், குடும்பத் தலைவராக பெண் இருந்தால் மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று பரவியல் தகவலுக்கு அரசு அளித்துள்ள விளக்கம் உள்ளே.
3. பாஜகவின் அரசப் பயங்கரவாதம் தான் ஸ்டான் சாமியை கொன்றது - திருமாவளவன் எம்பி
பாஜகவின் அரச பயங்கரவாதத்தால் தான் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்துள்ளார் எனவும், இது கரோனாவால் ஏற்பட்ட மரணமல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4. சூர்யா கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா - பாஜகவுக்கு சிபிஎம் கண்டனம்
ஜனநாயக ரீதியாக நடிகர் சூர்யா கருத்து சொன்னால், அவரை பகிரங்கமாக மிரட்டுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5. பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவு, இந்த வாரம் இறுதி அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. பிரதமர் உடனான சந்திப்பு அதிருப்தி அளிக்கிறது - காஷ்மீர் குப்கர் கூட்டணி
ஜம்மு காஷ்மீரின் குப்கர் கூட்டணித் தலைவர்கள் பிரதமர் மோடியுடனான சந்திப்பு அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
7. ஸ்டேன் சுவாமியின் மறைவு - முக்கியப்புள்ளிகள் இரங்கல்
பழங்குடியின சமூக செயற்பாட்டாளர் தந்தை ஸ்டேன் சுவாமியின் மறைவு குறித்து பிரபல அரசியல் தலைவர்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்.
8. குழந்தைக்கு பெயர் சூட்டிய புதுச்சேரி முதலமைச்சர்
சட்டப்பேரவை வளாகத்தில் தன்னை சந்தித்த தம்பதியினர் குழந்தைக்கு முதலமைச்சர் ரங்கசாமி பெயர் சூட்டினார்.
9. 'போடு வெடிய...'; டாஸ்மாக் கடை திறப்பைக் கொண்டாடி தீர்த்த கோவையன்ஸ்!
கோவையில் ஊரடங்குத் தளர்வுகள் காரணமாக, நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று (ஜூலை 5) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மதுபிரியர்கள் பலர் கடை வாசலில் பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து கொண்டாடினர்.
10. ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய மறுக்கும் அலுவலர்கள்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கல்வித்துறை அலுவலர்கள் ரத்து செய்ய மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது.