ETV Bharat / bharat

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - ETV Bharat Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் ...

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : Jul 2, 2021, 7:43 PM IST

1. தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலம் ஆக வேண்டும் - ஸ்டாலின்

'தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக வேண்டும், மாநிலத்தில் பின்தங்கிய மாவட்டம் என்று எதுவும் இருக்கக் கூடாது' என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. சர்வதேச தரம் நோக்கி சுகாதாரம்... ஸ்டாலின் வகுக்கும் வியூகம்: கூட்டிக் கழிச்சுப் பாரு சரியா வரும்!

தமிழ்நாட்டில் சுகாதாரத் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

3. நீட் தேர்வு: ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவின் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவின் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

4. 'ஜெ. நினைவிடத்திலிருந்து அரசியல் பயணம்' - சசிகலா கொடுத்த ஷாக்

ஊரடங்கு முடிந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என தொண்டர் ஒருவரிடம் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார்.

5.சென்னை ஐஐடியில் தலைதூக்குகிறது சாதிய பாகுபாடு?

தமிழ்நாட்டில் சமூக நீதி குறித்து பேசும் திராவிடக் கட்சிகள், சென்னை ஐஐடியில் நடந்துவரும் சாதிய பாகுபாடு விவகாரத்தில் தகுந்த நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும் என, ஐஐடி மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

6. 'ஆபத்துக்கு கால் செய்தால் அலட்சியம்' - பெண்கள் சேவை மையத்திற்கே சோதனை

"50 வயது மதிக்கத்தக்க பெண் சாலையில் மயங்கி கிடந்ததை கண்டு புதுக்கோட்டை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் காட்டிய அலட்சியம், முகச்சுளிப்பை ஏற்படுத்தியது" என்று சமூக செயற்பாட்டாளர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

7.'உழவர்களுக்குத் தரமான விதை, நெல்லை வழங்குக!' - திமுக அரசை சாடும் எடப்பாடி

டெல்டா மாவட்ட உழவர்களுக்குத் தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

8. அனைத்துப் பரிவர்த்தனைகளுக்குமே கேஷ்பேக் சலுகை: ரூ.50 கோடி ஒதுக்கிய பேடிஎம்!

'டிஜிட்டல் இந்தியா' திட்டம் நடைமுறைக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும்வகையில், பேடிஎம் பயனர்களுக்கு 50 கோடி ரூபாய் வரையிலான கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வணிகர்களுக்கான இலவச டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் இயந்திரத்திற்கான சலுகைத் திட்டத்தினையும் பேடிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது.

9. கோடிகளில் புரண்ட சட்டப்பேரவைத் தேர்தல்.. இவ்வளவு ரூபாய் செலவு என அரசாணை..

சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக 744 கோடி ரூபாய் செலவானதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

10. 17 ஆண்டு கனவு: 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை உருவாக்கிய அர்ஜுன்

ஆக்ஷன் ஹீரோ அர்ஜுன் 180 டன் எடையில் உருவாக்கியுள்ள ஆஞ்சநேயர் சிலை கோயிலின் குடமுழுக்கு விழா இன்று (ஜூன் 2) நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.