1.அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.11.8 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.8 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
2.'ஆப்கான் தலைமை அடிபணிந்துவிட்டது, எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்' - ஜோ பைடன்
தாலிபன் விவகாரம் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு இடையில், அமெரிக்க படைகளை ஆப்கானிலிருந்து வெளியேற்றும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
3.பிரதமர் மோடி சமூகநீதி காக்கும் காவலர் - எல். முருகன்
மக்களவை, மாநிலங்களவை ஆகிய அவைகளில் உறுப்பினராக இல்லாதவரை ஒன்றிய அமைச்சராக்கிய பெருமை பிரதமரையே சேரும், அவர் சமூகநீதி காக்கும் காவலர் என புன்செய் புளியம்பட்டியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
4. எஸ்.பி. வேலுமணிக்கு உடந்தையாக இருந்த நந்தகுமார் - பணியிடை நீக்கம் செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை
சென்னை: மாநகராட்சி சட்டவிரோத டெண்டர்களுக்கு காரணமான தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்பட சென்னை மாநகராட்சியில் தற்பொழுதுவரை வேலையில் உள்ள அலுவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு அறப்போர் இயக்கம் மனு அனுப்பியுள்ளது.
5. அப்போ அணில்; இப்போ பாம்பு? - செந்தில்பாலாஜி எடுத்த நாக அஸ்திரம்!
பல கோமாளிகளின் மேதாவித்தனங்களைக் காணும்போது, பாம்பு பல்லிகளின் தொல்லைகள் பரவாயில்லை எனத் தோன்றுவதாக செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார். ஏன் அப்படி கூறுகிறார், யாரைக் குறிப்பிடுகிறார் என்பது குறித்தும், முன்னர் நடந்த சில விவகாரங்கள் குறித்தும் காணலாம்.
6. ஹெலிகாப்டர் முழுக்க பணம்- தப்பியபோது அஷ்ரப் கானி செய்தது என்ன?
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கானி, ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை நிரப்பிக்கொண்டு சென்றதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
7.பதக்கம் வென்ற ஆயுதப்படை காவல் துறையினர் - ஏடிஜிபி பாராட்டு!
அகில இந்திய காவல் துறை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற காவல் துறையினருக்கு ஊக்கத் தொகை வழங்கி கூடுதல் ஏடிஜிபி ஜெயந்த் முரளி பாராட்டினார்.
8.மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மாற்று சான்றிதழை தர மறுக்கும் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
9. காபூல் விமான நிலையம் மீண்டும் திறப்பு: அமெரிக்கா
காபூல் விமான நிலையம் வெளியேற்ற நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பென்டகனின் கூட்டுத் தலைமை அலுவலர் ஹாங்க் டெய்லர் தெரிவித்தார்.
10. பொன்னியின் செல்வன்: ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட பிரமாண்ட போர்க்காட்சி!
ஹைதராபாத்: பொன்னியின் செல்வன் படத்தின் முக்கியப் போர் காட்சிக்கான படப்பிடிப்பு இன்று (ஆக. 17) முடிவடைகிறது.