ETV Bharat / bharat

சீனியர் மாணவர்கள் ரேகிங் தொல்லை.. உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவர்! - Andra Student Commits Suicide for ragging

ரேகிங் தொல்லையால் 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

suicide
suicide
author img

By

Published : Feb 20, 2023, 1:31 PM IST

Updated : Feb 20, 2023, 1:48 PM IST

நெல்லூர்: ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆனந்த சாகரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். ஆட்டோ ஓட்டுநரின் மகனான பிரதீப் அதே பகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ராமி ரெட்டி பிரதாப் குமார் ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்போன் எண்களை கேட்டும், பிரியாணி, பீர் உள்ளிட்டவற்றை வாங்கித் தருமாறும் சீனியர் மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் பிரதீப்பை தொந்தரவு செய்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பிரதீப்பிடன் போதிய பணம் இல்லாத காரணத்தால் மற்ற மாணவர்கள் எள்ளி நகையாடியதாகவும், பிரதீப்பின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு தொடர் தொந்தரவுகளை அளித்து வந்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்த போது யாரும் கண்டு கொள்ளவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கல்லூரியில் இருந்த வெளியேற பிரதீப்பின் டிசி கேட்ட போதும் கல்லூரி நிர்வாகம் தரமறுத்ததாக பெற்றோர் கூறுகின்றனர். மேலும், விடுதியில் தங்கியிருந்த பிரதீப்பை சீனியர் மாணவர்கள் ரேகிங் செய்ததாகவும், தேர்வுகள் எழுத விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற பிரதீப், தற்கொலை செய்து கொண்டார். ரயில் தண்டவாளம் அருகில் கிடந்த பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரதீப்பின் மரணம் கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : மனைவிகள் சண்டையை தடுத்த கணவர் மீது துப்பாக்கிச்சூடு!

Last Updated : Feb 20, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.