ETV Bharat / bharat

2 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம்: கவிஞர் வரவர ராவுக்குப் பிணை! - வரவர ராவுக்கு இடைக்கால பிணை

மும்பை: பீமா கோரேகான் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்த கவிஞர் வரவர ராவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது.

Varavara Rao
Varavara Rao
author img

By

Published : Feb 22, 2021, 1:58 PM IST

பீமா கோரேகான் வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்த கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு ஆறு மாதத்திற்குப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனால், மும்பையை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும் தேவைப்படும்போது விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் கடவுச்சீட்டைச் (பாஸ்போர்ட்) சமர்ப்பிக்க வேண்டும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து நீதிமன்றம், "வரவர ராவுக்குப் பிணை வழங்கவில்லை எனில், குடிமக்களின் மருத்துவத்திற்கான அடிப்படை உரிமை, மனித உரிமை ஆகியவற்றைக் காப்பாற்றும் கடமையிலிருந்து நீதிமன்றம் தோல்வி அடைந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி, எல்கர் பரிஷத் அமைப்பு சார்பாக ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில், வன்முறையைத் தூண்டும்விதமாக பேசியதாக வரவர ராவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். பீமா கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் இவர்களின் பேச்சுதான் எனவும், காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2018 ஆகஸ்ட் 28ஆம் தேதி, வரவர ராவ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும், தனது அன்றாடப் பணிகளைக்கூட செய்ய முடியாமல் வரவர ராவ் தவித்துவந்ததாக அவரின் குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் சார்பாக தாக்கல்செய்யப்பட்ட பிணை மனு ரத்துசெய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் வரவர ராவ் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.