சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம் நக்சல் பாதிப்பு மிகுந்த பகுதியாகும். அங்கு 'பூனா நர்கோம்' என்ற விழப்புணர்வு இயக்கத்தை சுக்மா காவல்துறையினர் நடத்திவருகின்றனர்.
இந்த இயக்கம் மூலம் நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மறுவாழ்வு மேற்கொள்ள அரசு வாய்ப்பு தருகிறது. இந்த இயக்கத்தின் தாக்கம் காரணமாக இரு பெண்கள் உள்பட 11 நக்சல் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். அவர்களின் மறுவாழ்வுக்கான உறுதியை காவல்துறை அளித்துள்ளது.
இதுதொடர்பாக சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் சர்மா கூறியதாவது, நக்சல் பாதிப்பு அதிகமுள்ள கதிரா பகுதியில் இவர்கள் காவல்துறைக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை முன்பு நடத்தியுள்ளனர்.
தற்போது தங்களின் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து இயல்பாக வாழ முன்வந்துள்ளனர். அரசின் சரண், மறுவாழ்வு கொள்கைப்படி உடனடி உதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் - அமைச்சர் எ.வ.வேலு