ETV Bharat / bharat

'எனக்கும் பசிக்கும்ல.?' கடையை உடைத்து பொருளை சாப்பிட்ட படையப்பா யானை! - காட்டு யானைகள் அட்டகாசம்

கேரள மாநிலம் மூணாறு பகுதியில், படையப்பா என்ற காட்டு யானை மளிகை கடை கதவை உடைத்து பொருள்களை சாப்பிட்டுச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

காட்டு யானைகள் அட்டகாசம்
காட்டு யானைகள் அட்டகாசம்
author img

By

Published : Feb 13, 2023, 12:53 PM IST

மளிகை கடையை உடைத்து பொருளை சாப்பிட்ட யானை

கேரளா: மூணாறு பகுதியில் கடந்த சில மாதங்களாகக் காட்டு யானைகளான கொம்பன் மற்றும் படையப்பாவினால் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வீடுகளை உடைத்துச் சேதப்படுத்துவது, சாலையில் இருக்கும் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்துவது, சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்வது, குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது, நியாய விலை கடையில் மற்றும் மளிகைக் கடைக்குள் உள்ளே சென்று பொருட்களைத் தின்பது என அட்டூழியம் செய்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று (பிப். 12) இரவு, மூணாறு அருகே உள்ள சொக்க நாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடைக்குள் புகுந்த படையப்பா என்ற காட்டு யானை, கடைக்குள் வைத்து இருந்த வெங்காயம் மற்றும் மைதாவினை சாப்பிட்டுச் சென்றுள்ளது. இதேக் கடைக்குள் கடந்த இரண்டு மாதங்களில் ஆறு முறை படையப்பா கதவை உடைத்து உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம் சூரிய நெல்லி பகுதியில் உள்ள ஏலச் செடிகளை மற்றும் அங்கு உள்ள வீட்டைக் கொம்பன் என்னும் காட்டு யானை முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளைக் குறிவைத்து அட்டகாசம் செய்து வரும் கொம்பன் மற்றும் படையப்பா காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "ஏலே நீ ஒரு Artist-னு நிரூபிச்சிட்டல" - பிரமிக்க வைத்த தென்காசி வீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.