ETV Bharat / bharat

ஜூன் 10 மாநிலங்களவை தேர்தல்.. தமிழ்நாட்டில் அதிருஷ்டம் யாருக்கு? ப.சிதம்பரம் மீண்டு(ம்) வருவாரா? - பாஜக

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்கள் உள்பட 57 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரத்தின் பதவிக்காலம் ஜூன்4ஆம் தேதியோடு முடிவடைகிறது.

Rajya Sabha
Rajya Sabha
author img

By

Published : May 12, 2022, 6:49 PM IST

புதுடெல்லி: தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 11 இடங்களில் 7இல் பாஜகவும், 4இல் சமாஜ்வாதியும் வெற்றி பெற வாய்ப்புள்ளன. இதற்கிடையில் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மீண்டும் மாநிலங்களவைக்கு (ராஜ்யசபா) தேர்வாகவுள்ளனர்.

அதேபோல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்தத் தலைவர் விஜய் சாய் ரெட்டியும் மீண்டும் தேர்வாகவுள்ளார். இதற்கிடையில் மகாராஷ்டிராவில் இருந்து தேர்வான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபுல் பட்டேல், சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ரவுத் ஆகியோரின் பதவிக்காலமும் வரும் ஜூன் 4ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

மகாராஷ்டிராவை பொருத்தவரை காலியாகவுள்ள 6 இடங்களில் 4 இடங்களை மகா விகாஷ் அகாதி கூட்டணியால் பெற முடியும். இதில் சிவசேனாவுக்கு இரு இடங்களும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸிற்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்படவுள்ளது.

Elections to 57 Rajya Sabha seats on June 10
ப. சிதம்பரம்

இதற்கிடையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார். நடப்பாண்டில் 77 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வு பெற்றனர். தற்போதுவரை மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 தொகுதியில் பாஜக பலம் 95 ஆக உள்ளது. காங்கிரஸிற்கு 29 உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை 6 காலியிடங்கள் உள்ளன. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் இதுவரை இறுதியாகவில்லை.

இதையும் படிங்க: நடிகை குத்து ரம்யா, டி.கே. சிவக்குமார் ட்விட்டரில் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.