ETV Bharat / bharat

Election Results Live: 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வரலாற்று வெற்றி - 2022 தேர்தல் முடிவுகள்

Election Results
Election Results
author img

By

Published : Mar 10, 2022, 7:19 AM IST

Updated : Mar 10, 2022, 7:55 PM IST

19:51 March 10

மார்ச் 10ஆம் தேதியே ஹோலி தொடங்கிவிட்டது - பிரதமர் மோடி

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தேர்தல் வெற்றி குறித்து பேசிவருகிறார். மார்ச் 10ஆம் தேதியே மக்களுக்கு ஹோலி தொடங்கிவிட்டதாக தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி குறித்து பேசியுள்ளார்.

19:24 March 10

பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி

பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி
பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அங்கு அவர் மீது மலர் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு தந்துள்ளனர்.

19:12 March 10

தோல்வியை மறைக்க இவிஎம்-ஐ குறைகூறும் கட்சிகள் - ஒவைசி கருத்து

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், உ.பி மக்கள் பாஜகவுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இம்முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். தேர்தலில் தங்கள் தோல்வியை மறைக்க கட்சிகள் வாக்கு இயந்திரங்களான இவிஎம் மெசின்களை குறை கூறுவார்கள்.

ஆனால் உண்மையில் தேர்தல் முடிவுகளின் சிப்புகள் மக்களின் மனதில் உள்ளது. இந்த தேர்தல் வெற்றி 80-20க்கான(80 மற்றும் 20 விழுக்காடு மக்களுக்கு இடையே). உத்தரப் பிரதேசத்தில் சிறுபான்மையினர்கள் வாக்குவங்கிகளாகவே இதுவரை இருந்துள்ளனர் என ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

18:52 March 10

புல்டோசர் பாபா யோகி - உ.பி பாஜக உற்சாக கொண்டாட்டம்

புல்டோசர் பாபா யோகி
புல்டோசர் பாபா யோகி

உத்தரப் பிரதசத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரவுள்ளார். இந்த வெற்றியை உ.பி. பாஜகவினர் பெரும் ஆர்பரிப்புடன் கொண்டாடிவருகின்றனர். கடந்த ஆட்சியின்போது உ.பி.யில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் மீது யோகி அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக குண்டாஸ் மற்றும் மாபியாக்கள் வீடுகளையும் ஆக்கிமிப்புகளையும் புல்டோசர் வைத்து இடித்து நிலத்தை மீட்டது.

இதன் காரணமாக யோகி ஆதித்யநாத் புல்டோசர் பாபா என அக்கட்சித் தொண்டர்களால் அழைக்கப்பட தொடங்கினார். இன்றைய வெற்றி கொண்டாட்டத்தின் போது பாஜக தொண்டர்கள் புல்டோசர் பொம்மைகளை தலையில் வைத்து கொண்டாடி புல்டோசர் பாபா என முழக்கத்தை எழுப்பினர்.

18:30 March 10

பாஜக தலைமை அலுவலகத்திற்கு அமித் ஷா, நட்டா வருகை

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா ஆகியோர் வருகை தந்துள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வருகை தந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் காத்துள்ளனர்.

18:27 March 10

ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி சந்தித்துள்ள நிலையில், கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ள G-23 தலைவர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18:12 March 10

அட்வான்ஸ்சாக ஹோலி கொண்டாடிய உ.பி. முதலமைச்சர் யோகி

உத்தரப் பிரதசத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று பாஜக ஆட்சி மீண்டும் அமைக்கவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் நாற்காலியில் அமரவுள்ள நிலையில், லக்னோவில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள பாஜக அலுவலகத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநில தலைவர்களுடன் கலர்பொடி தூவியும் பூசிக்கொண்டும் வெற்றியை கொண்டாடினர். இன்னும் சில நாள்களில் ஹோலி பண்டிகை வரவுள்ள நிலையில், பாஜகவின் அட்வான்ஸ்சாகவே ஹோலி கொண்டாடிவருகின்றனர்.

17:09 March 10

ராஜ்நாத் சிங் மகன் அமோக வெற்றி

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா தொகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுனில் சௌத்ரியைவிட சுமார் 1.8 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

17:01 March 10

கோவா மாநிலத்திலும் பெரும்பான்மை எண்ணிக்கையை பாஜக தொட்டுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மதியம் வரை 20க்கும் குறைவான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்துவந்த நிலையில், தற்போது பெரும்பான்மை எண்ணிக்கையான 20 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

16:37 March 10

"நெட்பிளிக்ஸ்சில் என்ன பார்க்கலாம்?" - ஐடியா கேட்கும் கார்தி சிதம்பரம்

  • Any recommendations for what to watch on @netflix now!

    — Karti P Chidambaram (@KartiPC) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. தேர்தல் படுதோல்வி காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பியும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் 'நெட்பிளிக்ஸ்' தளத்தில் என்ன திரைப்படம் பார்க்கலாம், ஏதாச்சும் ரெக்கமன்ட் பண்ணுங்க என ட்விட் செய்துள்ளார்.

நாடே தேர்தல் முடிவுகள் குறித்து பரபரத்துவரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூலாக ட்வீட் செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

16:21 March 10

தேர்தல் தோல்வி குறித்து சோனியா காந்தி ஆய்வு - காங்கிரஸ்

ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜிவாலா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புக்கு மாறாக வந்துள்ளதாக அவர் கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை விரைவில் கூட்டி தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வார் என சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

16:15 March 10

கோரக்பூர் தொகுதியில் யோகி அமோக வெற்றி

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் நகர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றுள்ளார்.

16:00 March 10

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திராவிடம் தோல்வியடைந்துள்ளார்.

15:52 March 10

மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன் - ராகுல் காந்தி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ள நிலையில், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கோட்டைவிட்டது.

தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாகிறேன். வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தோல்வியில் பாடம் கற்று இந்திய மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம் என ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

15:42 March 10

பகத் சிங் கிராமத்தில் பதவியேற்பு - பகவத் மன்

தேர்தல் வெற்றிக்குப் பின் ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் பகவத் மன் சங்க்ரூர் பகுதி மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், தனது பதவியேற்பு விழா பகத் சிங் பிறந்த கத்கர் கலன் தொகுதியில் நடைபெறும், ஆளும் மாளிகையில் பதவியேற்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். அதேபோல், பஞ்சாப் அரசு அலுவலகங்களில் அம்பேத்கார், பகத் சிங் படங்கள் மட்டுமே வைக்கப்படும் எனவும் முதலமைச்சரின் படங்கள் இடம்பெறாது எனக் கூறியுள்ளார்.

15:30 March 10

உன்னாவ், லக்கிம்பூர் கேரி தொகுதிகளிலும் பாஜக வெற்றிமுகம்

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக சிறை தண்டணை பெற்றார். இந்நிலையில், இந்த தேர்தலில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆஷா சிங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், ஆஷா சிங் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார். 10 சுற்றுக்கள் முடிவின் நிலவரப்படி, பாஜக வேட்பாளர் பங்கஜ் குப்தா 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அபினவ் குமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா சிங் வெறும் 438 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதேபோல், கடந்தாண்டு வேளாண் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட லக்கிம்பூர் கேரி தொகுதியிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

15:13 March 10

அம்பேத்கர் மற்றும் பகத் சிங் கனவை நிறைவேற்றுவேம் - ஆம் ஆத்மி உறுதி

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோர் டெல்லியில் உள்ள தனது தொண்டர்களிடம் உரையாற்றினார். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரை முன்னிறுத்தி பஞ்சாப் தேர்தலை ஆம் ஆத்மி எதிர்கொண்டது.

இந்நிலையில், தேர்தல் வெற்றிகுறித்து டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா பேசுகையில், அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் கனவை நிறைவேற்றும் வாய்ப்பு ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது. மாற்றத்திற்கு பஞ்சாப் மக்கள் வழிவகுத்துள்ளனர் என்றார்.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், மாபெரும் புரட்சியை பஞ்சாப் மாநிலம் செய்துள்ளது. மற்றக் கட்சியைச் சேர்ந்த பெரும் தலைவர்களான சுக்பிர் பாதல், பிரகாஷ் பாதல், அமிரீந்தர் சிங், சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, பிக்ரம் சிங் மதிஜா என பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். பஞ்சாப் மக்களுக்கு ஆம் ஆத்மி மாற்றத்தை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

15:04 March 10

வேலையின்மை என்ற நிலையை ஒழிப்பேன் - பஞ்சாப் மக்களுக்கு பகவத் மன் உறுதி

வெற்றி குறித்து பகவத் மன்
வெற்றி குறித்து பகவத் மன்

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவத் மன் பஞ்சாப் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பளித்துள்ள பஞ்சாப் மாநில மக்களுக்கு நேர்மையான ஆட்சி அளிப்பேன் எனக் கூறிய அவர் என்னுடைய பச்சை நிற மைக் கொண்ட பேனாவைப் பயன்படுத்தி, பஞ்சாப்பில் வேலையின்மை என்ற நிலையை ஒழிப்பேன் என்றுள்ளார்.

15:00 March 10

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து தோல்வி

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல், சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் லம்பி தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். இருவரும் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர்.

14:45 March 10

டெல்லி கோயிலில் முதலமைச்சர் கெஜ்ரிவால் வழிபாடு

முதலமைச்சர் கெஜ்ரிவால் வழிபாடு
முதலமைச்சர் கெஜ்ரிவால் வழிபாடு

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் புகழ்பெற்ற டெல்லி ஹனுமான் கோயிலில் வழிபாடு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் ஆகியோர் உடனிருந்தனர்.

14:24 March 10

சுயேட்சைகளின் ஆதரவு எங்களுக்கே - கோவா முதலமைச்சர்

கோவா மாநில தேர்தல் வெற்றி குறித்து அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பேட்டியளித்துள்ளார். மொத்தமுள்ள 40 இடங்களில் 19 இடங்களில் பாஜக முன்னிலை வகித்துவருகிறது. பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக பாஜக உள்ள நிலையில், சுயேட்சை ஆதரவு தங்களுக்கு உள்ளதாகவும், மாநிலத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

13:41 March 10

உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் தோல்வி

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத்தான் போட்டியிட்ட லால்கவுன் தொகுதியில் தோல்வியடைந்தார். ஹரீஷ் ராவத்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஸ்த் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

13:31 March 10

மணிப்பூரிலும் பெரும்பான்மையை தொட்ட பாஜக

மணிப்பூரில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 30 இடங்களில் தற்போது முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சியை அமைக்கிறது.

13:02 March 10

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தோல்வி

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

12:38 March 10

ஆம் ஆத்மிக்கு சித்து வாழ்த்து

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "மக்களின் குரல்தான் கடவுளின் குரல். எனவே பஞ்சாப் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன். ஆம் ஆத்மிக்கு எனது வாழ்த்துகள்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

12:19 March 10

புரட்சி செய்த பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துகள் - அரவிந்த் கெஜ்ரிவால்

மகிழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்
மகிழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த வெற்றி காரணமான பஞ்சாப் மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இத்தகைய மாபெரும் புரட்சி செய்த பஞ்சாப் மக்களுக்கு எனது வாழ்த்துகள் எனக் கூறி, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளரான பகவத் மான் உடன் இணைந்து நிற்கு புகைப்படத்தை கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

12:12 March 10

சோர்வடைய வேண்டாம் - தொண்டர்களுக்கு அகிலேஷ் வேண்டுகோள்

முதல்கட்ட தேர்தல் முடிவுகளைக் கண்டு சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை காத்திருந்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

11:57 March 10

மனோகர் பாரிக்கர் மகன் தோல்வி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பனாஜி தொகுதியில் தோல்வியைடந்துள்ளார். அதிருப்தி காரணமாக பாஜகவிலிருந்து விலகி தனித்து போட்டியிட்ட உத்பல் பாரிக்கர் பாஜக வேட்பாளர் அட்னாசியோ பபூஷிடம் தோல்வியடைந்தார்.

11:35 March 10

ஆம் ஆத்மியின் அலையால் பஞ்சாப்பில் ஜாம்பவான்கள் திணறல்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாபெரும் வெற்றியால் ஆளும் கட்சியான காங்கிரஸ், ஆண்ட கட்சியான சிரோமணி அகாலி தளம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவைக் கண்டுள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர்களும் முன்னாள் முதமலைச்சர்களுமான பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் பின்னடைவில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய கேப்டன் அமரீந்தர் சிங் பாட்டியாலா தொகுதியில் பின்னடைவில் உள்ளார். அதேபோல் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் பின்னடைவில் உள்ளார். ஆம் ஆத்மி அலையால் பஞ்சாப்பின் பெரும் ஜாம்பவான்கள் வெற்றிக்காக திணறிவருகின்றனர்.

11:18 March 10

மூன்று மாநிலங்களில் திணறும் முதலமைச்சர்கள்

கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்கள் பின்னடைவில் உள்ளனர். கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் குறைந்த வாக்குகளில் மாறி மாறி முன்னிலை மற்றும் பின்னடைவை சந்தித்துவருகிறார்.

அதேபோல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். உத்தரகாண்ட் முதமலைச்சர் புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார்.

11:05 March 10

கோவாவில் பெரும்பான்மைக்கு அருகே பாஜக

கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் 18இல் பாஜக முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 20 இடங்கள் தேவை என்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் ஐந்து இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும், மற்றவை 3 மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

10:43 March 10

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றிமுகத்தில் உள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார்.

10:32 March 10

உத்தரகாண்டில் பாஜக முன்னிலை

உத்தரகாண்டில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 35க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்த முன்னிலை நிலவரம் தொடரும்பட்சத்தில் உத்தரகாண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.

10:22 March 10

10:02 March 10

உ.பியில் மீண்டும் யோகி ஆட்சி?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 220க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால், மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். உத்தரப் பிரதேச வரலாற்றில் ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சியில் இருந்த பின் மீண்டும் உடனடியாக முதலமைச்சராக தேர்வாகும் பெருமையை யோகி ஆதித்யநாத் பெறுவார்.

09:42 March 10

பஞ்சாப்பில் வரலாறு படைக்கிறதா ஆம் ஆத்மி?

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி முகத்தில் உள்ளது. பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 75க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த முன்னிலை நிலவரம் தொடரும்பட்சத்தில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சி அமையவுள்ளது.

09:31 March 10

கோவாவில் கிங் மேக்கராகிறதா திரிணாமுல்?

கிங் மேக்கராகிறதா திரிணாமுல்?
கிங் மேக்கராகிறதா திரிணாமுல்?

கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வரத்துவங்கி விட்டன. 40 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 15 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. கடுமையான போட்டி நிலவுவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியாளரை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்பு.

09:26 March 10

கோவா, பஞ்சாப் முதலமைச்சர்கள் பின்னடைவு

கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் முதலமைச்சர்கள் தற்போதைய நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்துள்ளனர். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் சான்குலின் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதேபோல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

09:14 March 10

மணிப்பூரில் பாஜக முன்னிலை

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 10க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

09:05 March 10

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலை

முதற்கட்ட தேர்தல் முடிவு நிலவரப்படி, வேளாண் சட்டப் போராட்டத்தின் மையமாகத் திகழ்ந்த மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பாஜக கணிசமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் மேற்கு உ.பி பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சி கூட்டணி வைத்து பாஜகவை எதிர்த்து களம் கண்டது. இருப்பினும் தற்போதைய நிலவரப்படி பாஜகவே அங்கு கணிசமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

08:49 March 10

உ.பியில் பாஜக முன்னிலை
உ.பியில் பாஜக முன்னிலை

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து முன்னிலை வகிக்கிறார். பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி பகதூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். முன்னாள் முதலமைச்சர் அமிரீந்தர் சிங் பாட்டிலா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

கோவா சான்குலின் தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவன்த் முன்னிலை வகிக்கிறார்.

08:36 March 10

உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு பின்னடைவு

கோவா முதலமைச்சர் ஸ்ரீ தத்தா கோயிலில் வழிபாடு

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோராக்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் பின்னடைவைக் கண்டுள்ளார்.

08:29 March 10

தாபல் வாக்குகள் எண்ணிக்கை நிலவரப்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்திலும், ஆளும் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளது. உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

08:11 March 10

உ.பியில் பாஜக முன்னிலை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சியும் கணிசமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. முதற்கட்டமாக தாபல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளது.

08:00 March 10

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 690 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.

07:51 March 10

தயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்

வாக்கு எண்ணிக்கை மையம்
வாக்கு எண்ணிக்கை மையம்

இன்னும் சில நிமிடங்களில் ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. சரியாக எட்டு மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். எனவே, வாக்கு எண்ணிக்கைக்காக அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் தயார் நிலையில் உள்ளன.

07:15 March 10

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களுள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவுகளுக்கு அனைவரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது உத்தரப் பிரதேச தேர்தல் பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக படு உற்சாகத்துடன் களமிறங்க வாய்ப்பாக அமையும். மேலும், 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெருவாரியான இடங்களை கைப்பற்றினால், இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளர் மற்ற கட்சிகளின் தேவையின்றி எளிதாக வெல்லக்கூடிய சூழல் உருவாகும். எனவே, உ.பி. தேர்தல் முடிவுகளை தேசிய அரசியலிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில் அங்கு ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது மெய்ப்பிக்கும் பட்சத்தில் ஆம் ஆத்மிக்கு பெரிய முன்னேற்றமாகவும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும் கருதப்படும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. கோவாவிலும், மணிப்பூரிலும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதேவேளை, 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பாஜக அங்கு ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Mar 10, 2022, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.