ETV Bharat / bharat

சிறுத்தையிடம் மல்லுகட்டி மான் குட்டியை மீட்ட 65 வயது மூதாட்டி - சிறுத்தையிடம் மூதாட்டி சண்டை

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் சிறுத்தையிடம் சிக்கிய மான் குட்டியை மீட்ட மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவித்துவருகிறது.

சிறுத்தையிடம் மல்லுகட்டி மான் குட்டியை மீட்ட மூதாட்டி

author img

By

Published : Feb 7, 2023, 6:06 PM IST

டோராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் வசித்துவரும் தமதி தேவி என்னும் 65 வயது மூதாட்டி, சிறுத்தையிடம் சிக்கிய மான் குட்டியை மல்லுகட்டி மீட்டுள்ளார். இவரது எதிர்ப்பை கண்ட பயந்த சிறுத்தை மான் குட்டியை விட்டுவிட்டு பயந்தோடியுள்ளது. இவரது மகத்தான தைரியத்தையும், கருணையையும் சாமோலி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சிறுத்தையிடம் மல்லுகட்டி மான் குட்டியை மீட்ட மூதாட்டி
சிறுத்தையிடம் மல்லுகட்டி மான் குட்டியை மீட்ட மூதாட்டி

இந்த சம்பவம் வான் கிராமத்தில் நேற்று (பிப். 6) நடந்துள்ளது. இதுகுறித்து தமதி தேவி கூறுகையில், எனது வீட்டிற்கு அருகே வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று மான் குட்டியை கவ்விச் செல்வதை கவனித்தேன். மான் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை அறிந்தேன். இதனால், கையில் கிடைத்த கட்டையை வைத்துக்கொண்டு சத்தமிட்டபடி சிறுத்தையை நோக்கி ஓடினேன்.

இதைக்கண்ட சிறுத்தை மான் குட்டியை விட்டுவிட்டு அங்கிருந்து பயந்தோடி வனப்பகுதிக்குள் மறைந்தது. இதையடுத்து காயம்பட்டிருந்த மான் குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து பால் கொடுத்தேன். அதன்பின், உள்ளூர் கால்நடை மருத்துவர் மணீஷ் குமார் பாண்டேவுக்கு தகவல் கொடுத்தேன்.

அதனடிப்படையில் அவர் எனது வீட்டிற்கு வந்து மான் குட்டிக்கு சிகிச்சை அளித்தார். இப்போது குட்டி நலமாக உள்ளது. அக்கம் பக்க கிராமக்கள் வந்து அதை பார்த்து செல்கின்றனர் எனத் தெரிவித்தார். இதுகுறித்து வனத்துறை தரப்பில், சிறுத்தையின் பிடியில் இருந்து மான் குட்டியை காப்பாற்றிய தமதி தேவிக்கும், உடனடியாக சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த குட்டியை குழந்தை போல பாவித்து தேவி கவனித்து வருகிறார். இந்த குட்டியை குணமடைந்த உடன், வனப்பகுதியில் கொண்டு சென்று விட உள்ளோம். அதுவரை வனத்துறைக் கட்டுப்பாட்டில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காட்டுயானை கூட்டத்தைப் பின்தொடர்ந்த புலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.