ETV Bharat / bharat

புனேயில் இருவேறு இடங்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - புனேயில் இருவேறு இடங்களில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

புனேயில் இருவேறு இடங்களில் 8 பேர் நீரில் மூழ்கி பலி!

author img

By

Published : May 20, 2022, 3:13 PM IST

புனே(மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (மே 20) நடந்த இருவேறு சம்பவங்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள போர் தெஹ்சிலில் உள்ள பட்கர் அணையின் உப்பங்கழியில்(கடலுடன் ஆறு இணையும் இடம்) வியாழக்கிழமை அன்று நான்கு பெண்கள் மூழ்கி இறந்ததாக அம்மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மற்றொரு பெண் இப்பகுதியில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல் போன பெண்ணைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.முன்னதாக குடும்ப விழா ஒன்றில் பங்கேற்பதற்காக புனே மாவட்டத்தில் உள்ள நரேகான் கிராமத்திற்குச் சென்ற அந்தப் பெண், மாலையில் பட்கர் அணையின் உப்பங்கழியில் நீராடச் சென்றதாக புனே கிராமப்புற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காணாமல் போன பெண்ணைத்தேடும் பணியில் இருந்தபோது 19 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அக்காவல் அலுவலர் தெரிவித்தார்.

இரண்டாவது சம்பவத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் புனேவில் உள்ள கேட் தாலுகாவில் உள்ள சாசக்மான் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர். சசக்மான் அணைக்கு அருகில் அமைந்துள்ள சஹ்யாத்ரி குடியிருப்புப் பள்ளியைச் சேர்ந்த 4 பள்ளி மாணவர்கள் அங்கு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரே நாளில் இருவேறு இடங்களில் 8 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிகார் புயலில் சிக்கி 27 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.