காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில், வசித்துவரும் தம்பதி, தனது எட்டு மாத குழந்தையை கவனித்துக்கொள்ள பணிப்பெண்னை நியமித்திருந்தனர். அந்தப் பணிப்பெண் குழந்தையை கவனித்துவந்த நிலையில், குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனிடையே வீட்டின் சிசிடிவி காட்சிகளை பெற்றோர் பார்க்கையில், திடுக்கிடும் உண்மை தெரியவந்தது.
அதாவது, பணிப்பெண் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக, குழந்தையில் காதை திருவதும், குழந்தையைப் படுக்கையில் தூக்கிப் போடுவதும் போன்ற கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் குழந்தையை வேகமாகக் குலுக்கியபோது குழந்தை மயக்கநிலைக்கு சென்றதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: நெல்லை லாக்கப் மரண விவகாரத்தில் திடீர் திருப்பம்