கொச்சி: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் பி.எஸ்., சந்தீப் நாயர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளிலிருந்த ஒரு கோடியே 85 லட்சம் ரூபாயை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல்செய்தது.
தங்கக் கடத்தல் வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட கேரள முதலமைச்சர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலர் எம். சிவசங்கரின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல்செய்வதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறையினர் தொடங்கியுள்ளதாக அத்துறையின் உயர்மட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், சிவசங்கர் மீது அமலாக்கத் துறை இன்று (டிச. 24) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்கிறது.
ஐக்கிய அமீரகத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்திற்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி வந்தடைந்த பார்சலில் ரூ.54.8 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம், கடத்திவரப்பட்டதை சுங்கத் துறையினர் கண்டறிந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, சுங்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தாவூத் இப்ராஹிமிற்குத் தொடர்பா?