புது டெல்லி: பெங்களூரில் 6 வெவ்வேறு இடங்களில் சுயாதின வியாபாரிகளிடம் அமலாக்கத் துறையினரால் சோதனை நிகழ்த்தப்பட்டது . இது குறித்து பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 நிறுவனம் "அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்ட எந்த ஒரு நிதியும் பேடிஎம் அல்லது அதனின் எந்த ஒரு குழுவின் நிறுவனத்தின் நிதியும் அல்ல என்பது தெளியவந்துள்ளது" என தெரிவித்துள்ளது.
சீன லோன் ஆப் மோசடி வழக்கின் விசாரணைக்காக பெங்களூருவில் உள்ள 6 வெவ்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. பேடிஎம், ரேசர் பே, கேஸ் ஃப்ரீ போன்ற சீன லோன் ஆப்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பணப் பரிவர்த்தன செயலிகளிலும் சோதனை செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. இதன் மூலம், இந்த வர்த்தகர்கள் அனைவரும் சுயாதீன நிறுவனம் என்றும், யாரும் குழு நிறுவனங்களாக இல்லை என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, ஒரு சில வர்த்தகர்களின் கணக்குகளில் உள்ள நிதிகளை முடக்கி வைக்குமாறு அமலாக்கத் துறையினர் பேடிஎம் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்த விசாரணையில் குற்றங்கள் பல்வேறு பணப்பரிவர்த்தனை முறைகள் கொண்ட பல வர்த்தகர் கணக்குகள் மூலம் நடத்தப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், அவர்கள் தாங்கள் இணையத்தில் பதிவு செய்த முகவரியிலிருந்து வேலை செய்வதில்லை என்பதும் தெரியவந்தது. இந்த சீன நிறுவனத்தின் வர்த்தகர் கணக்குகளில் இருந்து 17 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மோடியால் இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே லாபம்...! - ராகுல் காந்தி