ஜார்க்கண்ட் (ராஞ்சி): ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல இடங்களில் அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) தரப்பில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. மதுபான ஊழல் மற்றும் தியோகர் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரகம் ராஞ்சியில் உள்ள ஹர்மு, தும்பா மற்றும் தியோகர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மத்திய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பிய மூன்றாம் நாட்களுக்குப் பிறகு அமலாக்கத்துறை இயக்குநரகம் இன்று தனது சோதனைகளைத் தொடங்கி இருக்கின்றன. இன்று காலை 12க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை இயக்குநரக குழுக்கள் ஒரே நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 32 இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றன.
இதையும் படிங்க: டெல்லி விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் சார்பாக ஆகஸ்ட் 14ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்து சம்மன் அனுப்பியிருந்தது. இது அமலாக்கத்துறை இயக்குநரகம் அனுப்பிய இரண்டாவது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகஸ்ட் 24ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகத் தெரிவித்திருந்தாக கூறப்படுகிறது.
டும்ரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னை கைது செய்ய பா.ஜ.க அரசுத் திட்டம் தீட்டி வருவதாகவும், அமலாக்கத்துறை இயக்குநரகம், வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை பா.ஜ.க அரசு தனது அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்துவதாக மேலும் எனக்கு அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் குறிப்பிட்டுள்ளனர் என கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 32 இடங்களில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள்! சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?