ETV Bharat / bharat

கைமாறிய 1,100 கிலோ தங்கம்- சிக்கிய ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரி!

ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரிகளில் அமலாக்கத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்திவருகிறார்கள்.

ED
ED
author img

By

Published : Oct 7, 2021, 2:41 PM IST

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரிகளில் அமலாக்கத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

முன்னதாக இந்த நகைக் கடையில், ரூ.330 கோடி மதிப்பிலான 1,100 கிலோ தங்கம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து வருவாய் நுண்ணறிவுத்துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் அமலாக்க அலுவலர்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லரியில் இன்று சோதனை நடத்தினார்கள். முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், வருவாய் நுண்ணறிவு அலுவலர்கள் (டிஆர்ஐ) நகைக்கடையின் நிர்வாக இயக்குனர் பிரதீப் குமார் மற்றும் மூன்று பேரை இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, அலுவலர்கள் பணமோசடி விவரங்களை சேகரித்தனர். இதற்கிடையே, ஸ்ரீ கிருஷ்ணா நகைக்கடைகள் மற்றும் நகரத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் உள்ளிட்ட அலுவலகங்களில் அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனைத்து கடைகளிலும் உள்ள ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பச்சையப்பாஸ் துணி கடையில் ரெய்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.