ETV Bharat / bharat

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு... முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் கைது...

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ED
ED
author img

By

Published : Aug 25, 2022, 2:12 PM IST

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பங்கஜ் மிஸ்ரா மற்றும் பச்சு யாதவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அவர்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நேற்று(ஆக.24) முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அந்த துப்பாக்கிகள் பிரேம் பிரகாஷின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த, ராஞ்சியை சேர்ந்த 2 போலீசாருடையது என்றும், அவர்கள் பணி முடித்து செல்லும்போது மழை பெய்ததால், பிரேம் பிரகாஷின் வீட்டில் ஊழியராக இருந்த நபரிடம் துப்பாக்கிகளை கொடுத்து பத்திரமாக வைக்க சொன்னதாகவும் தெரியவந்தது. இதையடுத்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக கூறி, இரண்டு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் பிரேம் பிரகாஷை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:கள யதார்த்தத்தை புறக்கணிக்கிறார்கள் எனக்கூறி இளம்காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் ராஜினாமா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.