ETV Bharat / bharat

Happy Easter 2023: பாவம் நீக்கி இயேசுவின் உயிர்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் திருநாள்! - ஈஸ்டர் திருநாள் 2023

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாவத்தின் பிணி நீக்கி உலகத்தை மீட்ட இயேசு கிறிஸ்துவன் உயிர்பிப்பை குறிக்கும் நாளாக இன்று கொண்டாடப்படுகிறது.

Easter
Easter
author img

By

Published : Apr 9, 2023, 7:53 AM IST

ஹைதராபாத் : உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நாள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்து எழுதலையும், மரணத்தின் மீது அவர் கொண்ட வெற்றியைக் குறிக்கும் நாளாகும். கிறிஸ்தவம் கூறும் நித்திய வாழ்வை அடைய விரும்புபர்வகள், இயேசு கிறிஸ்துவை போல் பாவங்களை தியாகம் செய்து, அதன் மூலம் தீமை மற்றும் மரணத்தை வென்று விண்ணகத்தை அடைய வேண்டும் என்பதை குறிக்கும் நாளாக இந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

திருவிவிலியத்தில் உள்ள புதிய ஏற்பாட்டின் படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அடக்கம் செய்யப்பட்ட மூன்றாவது நாளில் ஈஸ்டர் வருகிறது. இந்த நாள் விருந்து மற்றும் பிரார்த்தனைகளுடன் கொண்டாடப்படுகிறது. மறுபிறப்பு மற்றும் புதுப்பிப்பை குறிக்கும் வகையிலான சிறப்பு பிரார்த்தனைகளில் கிறிஸ்தவர்கள் இன்று ஈடுபடுகின்றனர்.

நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தைய தவக்காலத்தில் நோன்பு இருக்கும் கிறிஸ்தவர்கள், இன்று தங்களை நோன்புகளை துறந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.

இந்த ஈஸ்டர் பண்டிகைக்கு கூடுதல் சுவாரயஸ்த்தை ஏற்படுத்தும் வகையில் ஈஸ்டர் முட்டை வைத்து கொண்டாடப்படும். ஈஸ்டர் பண்டிகையை குறிக்கும் சாக்லெட் முட்டைகள் முதன் முதலில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் 19 ஆம் நூற்றாண்டில் வைக்கப்பட்டு தொன்று தொட்டு கொண்டாடப்படுகின்றன.

ஈஸ்டர் முட்டை என்பது பொழுதுபோக்கு மற்றும் கருவுறுதலை அடையாளமாக குறிப்பதாக கூறப்படுகிறது. ஈஸ்ட்ர் பண்டிகையை தொடர்ந்து வரும் வசந்த காலம் போல் வாழ்விலும் வசந்தம் பிறக்கும் என்பதை குறிக்கும் வகையில் இந்நாளில் ஈஸ்டர் முட்டைகள் வைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

ஈஸ்டர் என்ற சொல் வசந்த காலத்தின் பண்டைய பேகன் தெய்வமான "ஈஸ்ட்ரே" என்பதை குறிக்கின்றது. பல நாடுகளில், மிட்டாய்கள் நிரப்பப்பட்ட ஈஸ்டர் முட்டைகளை கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். ஆண்டு இரு முறை மட்டும் சூரியனின் நோக்கி பூமி நேர்க் கோட்டில் இருக்கும்.

அன்றைய நாள் சம அளவில் பகல் மற்றும் இரவு இருக்கும். இந்த நிகழ்வு ஈக்வினாக்ஸ் என அழைக்கப்படுகிறது. அப்படி வசந்த காலத்தில் வரும் ஈக்வினாக்ஸ் தினத்தை அடுத்த பவுர்ணமிக்கு அடுத்த முதல் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் மற்றொரு விஷேச நிகழ்வான பன்னி (Bunny) கொண்டாட்டம் ஜெர்மனியில் தோன்றி 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவி இன்றளவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : CSK Vs MI : எல் கிளாசிகோ ஆட்டத்தில் சென்னை மாஸ் வெற்றி - மும்பையை பந்தாடியது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.