ETV Bharat / bharat

சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்... மக்கள் பீதி! - nilanadukkathaal makkal paathippu

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் 4.1 ரிக்டர் அளவுவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் மற்றும் பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 25, 2023, 1:39 PM IST

சர்குஜா: சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை 10.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. 7 வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், இது லேசான நிலநடுக்கம் என்பதால் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக, ராய்ப்பூர் வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார். நிலநடுக்கம் ஒப்பிடும் அளவில் லேசானதாக இருந்த போதிலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலநடுக்கம், மாநிலத்தின் மையமான சூரஜ்பூர் பகுதியில் உள்ள பட்கான் கிராமத்தில் பதிவாகியுள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தின் தாக்கம் வடக்கு சத்தீஸ்கர் முழுவதும் உணரப்பட்டது.

சத்தீஸ்கரில் நிலநடுக்கம் ஏற்படுவது சாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது. ஏனெனில், பிப்ரவரி 2022 க்குப் பிறகு, இந்த மாவட்டம் நான்காவது முறையாக நிலநடுக்கத்தால் தாக்கப்பட்டுள்ளது. மேலும், 2022 -ல் சூரஜ்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து, எந்தவொரு இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மாநில அரசு மக்களுக்கு உறுதி அளித்து உள்ளது. நில நடுக்கத்தை எதிர்க்கும் வகையில் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டால் தங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், குவாலியரில் மீண்டும் நில நடுக்கம் உணரப்பட்டது. காலை 10.30 மணியளவில் அப்பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

இதையும் படிங்க:தொடரும் நிலநடுக்கங்களால் பீதியில் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.