குஜராத் (கட்ச்): குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படையினருடன் இணைந்து இந்திய கடலோர காவல் படையினர் நேற்று (டிசம்பர் 19) சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அல் ஹுசைனி என்ற மீன்பிடி படகு வருவதைப் பாதுகாப்புப் படையினர் பார்த்துள்ளனர்.
படகைச் சுற்றிவளைத்து சோதனை செய்ததில் 77 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பன்னாட்டு மதிப்பு 400 கோடி ரூபாயாகும். அந்தப் படகிலிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
77 கிலோ ஹெராயின், அதைக் கொண்டுசெல்ல பயன்படுத்திய படகை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர். இது குறித்து குஜராத் பாதுகாப்புப் பிரிவு ட்விட்டர் பதிவில், "போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஆறு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய படகும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. அவர்களை ஜகு என்ற இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த செம்படம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றாயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடித்தவர் கைது