பெங்களுரு: கேரளாவில் இருந்து பெங்களூருவில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த மலையாள தொலைக்காட்சி நடிகர் உள்பட 3 பேர் கொண்ட கும்பலை எச்எஸ்ஆர் லேஅவுட் போலீசார் கைது செய்தனர்.
இதில் மலையாள சின்னத்திரை நடிகர் ஷியாஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான முகமது ஷாஹித் மற்றும் மங்கள் டோடி ஜிதின் ஆகியோர் இன்று (செப்-23) கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் எச்எஸ்ஆர், கோரமங்களா பகுதியில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளை குறிவைத்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்தனர். கேரளாவில் இருந்து கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருட்களைக்கொண்டு வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இதுகுறித்து தென்கிழக்கு பிரிவு டிசிபி சி.கே.பாபா கூறுகையில், 'பெங்களூருவில் நடக்கும் ஹைஃபை பார்ட்டிகளுக்கு இவர்கள் கஞ்சா மற்றும் எம்டிஎம்ஏ என்ற போதைப்பொருளை விநியோகம் செய்து வந்தனர். தற்போது எச்எஸ்ஆர் லேஅவுட் போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 191 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் 2.80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்’ எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க:லாட்டரியால் வந்தது ரூ. 25 கோடி... போனது நிம்மதி... வேதனைப்படும் ஆட்டோ ஓட்டுநர்...