ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது சில வாரங்களுக்கு முன்பு தீவரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இந்த ட்ரோன் விமானங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும், இதனைப் பயன்படுத்த பல்வேறு விதிமுறைகளையும் அரசு விதித்தது.
இந்நிலையில், ஜம்மு, காஷ்மீரின் கனச்சக் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பறந்துவந்த ட்ரோன் விமானத்தை தேசிய பாதுகாப்பு படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளதாகவும், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானத்தில் இருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக சிறிய ரக ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்துவது அண்மைக்காலங்களாக அதிகரித்துவருவதும், இதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரை வட்டமிட்ட ட்ரோன்கள்- பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு!