சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள வால்டோஹா பகுதியில் நேற்று (டிசம்பர் 3) எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் டிரோன் ஒன்று நுழைந்துள்ளது. இதனால் பாதுகாப்புப்படை வீரர்கள் டிரோனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனிடையே போலீசாரும் சம்பவயிடத்துக்கு விரைந்தனர். இந்த கூட்டு முயற்சியில் டிரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இந்த டிரோனில் இருந்த ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வால்டோஹா போலீசார் கூறுகையில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவின் வால்டோஹாவின் கலியா கிராமம் வழியாக இரவு 11 மணியளவில் டிரோன் ஒன்று நுழைந்துள்ளது. இதனையறிந்த வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அதிகாலை 2.30 மணியளவில் சுட்டுவீழ்திதனர். அதில் 3 கிலோ ஹெராயின் இருந்தது. இது குவாட்காப்டர் ட்ரோனாகும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஆயுத கடத்தல்