இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர்-தார் சாலையில் ரூ.3 கோடி மதிப்பிலான 100 கிராம் நிறையுள்ள 69 தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து வருவாய் புலனாய்வு அலுவலர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-
வருவாய் புலனாய்வு அலுவலர்கள் தார்-இந்தூர் சாலையில் உள்ள தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் 100 கிராம் எடையுள்ள 69 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தத் தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.3.18 கோடி ஆகும். இதன் பேரில் காரில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்திவருகிறோம்.
இவ்வாறு வருவாய் புலனாய்வு அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.