நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகி பரவி வருகிறது. இந்நிலையில், கரோனாவுக்கு எதிராக செயல்படும் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்தை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்), ஹைதராபாத் ரெட்டி லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த மருந்தை தீவிரமான கரோனா பாதிப்பிலிருக்கும் நோயாளிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் கரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து அளிக்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, 10 ஆயிரம் டோஸ்கள் செலுத்தப்படவுள்ளன.
இதையும் படிங்க:ஒடிசாவில் இருந்து வந்த ஆக்ஸிஜன் !