புதுச்சேரி: காரைக்கால் அருகே காமராஜர் வளாகத்தில் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு 4,448 விவசாயிகளுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான காசோலையினை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசின் இந்திய உணவுக் கழகம் (FCI) மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும். விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகை பெற்றுத் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் கூடுதல் பேருந்துகள் இல்லாத காரணத்தால் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது.
இருப்பினும், அண்டை மாநில போக்குவரத்து கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி புதுச்சேரியில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் கண்டிப்பாக இயக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!