ஆந்திரா: ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், செருக்குவாடா என்ற பகுதியில் குரங்கு ஒன்றை நாய்கள் கடித்து குதறியதாகத் தெரிகிறது.
படுகாயமடைந்த குரங்கை அப்பகுதி மக்கள், பீமாவரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குரங்குக்கு சிகிச்சை அளித்தபோது, குரங்கில் தோள் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததாகத் தெரிகிறது. உடனடியாக குரங்கின் உடலில் இருந்து குண்டு அகற்றிய மருத்துவர், அதற்கு சிகிச்சை அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
குரங்கின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது நிஜ துப்பாக்கி குண்டு இல்லை என்றும், நீர்நிலைகளில் உள்ள பறவைகளை கொல்ல பயன்படுத்தப்படும் ஃபில்லெட் வகை குண்டு என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் லிப்-லாக் சேலஞ்ச்... 18+ மாணவர்களை தேடும் போலீஸ்...