புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ஆம் தேதி தொடங்கி பிப்.17ஆம் தேதி நிறைவுற்றது. தற்போது தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு ஏப்.8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை (மார்ச் 24) மக்களவையில் திமுக எம்பி., கலாநிதி வீராசாமி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநாகராட்சி உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்கப்படுமா எனக் கேள்வியெழுப்பினார்.
இது குறித்து அவர் பேசுகையில், “நம் நாட்டில் மூன்று வகையான மக்கள் நலனுக்கான உழைக்கும் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சியை சேர்ந்த உறுப்பினர்கள். இவர்களில் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ ஆகிய இருவருக்கு மட்டுமே அரசின் சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆனால் மாநகராட்சி உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆகவே அவர்களுக்கும் ஒரு தொகை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு அதில் ஒரு தொகை மத்திய அரசு சார்பாகவும் எஞ்சிய தொகை மாநில அரசு சார்பாகவும் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.. எதிர்க்கட்சிகள் அமளி.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!