புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன், ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று (ஜன.28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜி-20 அமைப்பின் மாநாடு கூட்டம் புதுச்சேரியில் 30 மற்றும் 31ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
ஜி-20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், இந்திய நாட்டின் சுற்றுச்சூழல், தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கலந்துகொண்டு உரையாட உள்ளனர். புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும், உணவு விடுதிகள், பார்கள் மூடப்படாது.
விமான நிலையம், மற்றும் ராடிசன், அக்காடு, ரெசிடென்சி ஆகிய 3 தங்கும் விடுதிகள், 100அடி சாலையில் உள்ள கருத்தரங்கு நடக்கும் சுகன்யா அரங்கம் ஆகிய 5 பகுதிகளில் மட்டுமே 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. இது பிப்.1ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மற்ற பகுதிகளில் எந்த தடையும் இல்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கில் தனித்து களமிறங்கும் அதிமுக - கே.ஏ.செங்கோட்டையன் தகவல்