டெல்லி : ஏர் இந்தியா ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. பெரும் இழப்பை சந்தித்து வந்த பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா' விமானப் போக்குவரத்து நிறுவனத்தை ஏலத்தில் விட ஒன்றிய அரசு முடிவு செய்தது.
இந்த நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஏலம் கேட்டு முன்மொழிவுகளை அனுப்பியிருந்தன. ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களும் அந்த நிறுவனத்தை வாங்க ஏலம் கோரியிருந்தனர்.
இந்த நிறுனத்தை வாங்க டாடா நிறுவனமும் ஒப்பந்தப் புள்ளி கோரியிருந்தது. இந்நிலையில் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு முயற்சி செய்தது. ஆனால் அப்பொழுது அந்தப் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் என் டாடா ட்விட்டரில், “இது குறித்து ரத்தன் டாடா ட்விட்டரில், “வரவேற்கிறேன்.. ஏர் இந்தியா..
ஏர் இந்தியா நிறுவன ஏலத்தில் டாடா குழுமம் வென்றிருப்பது மகிழ்ச்சியான செய்தி. ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். இது டாடா குழுமத்திற்கு விமானத் துறையில் மிகவும் வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும்.
உணர்வுப்பூர்வமாக, ஏர் இந்தியா, ஜேஆர்டி டாட்டாவின் தலைமையில் ஒரு காலத்தில், உலகின் மிகவும் மதிப்புமிக்க விமான நிறுவனங்களில் ஒன்றாக புகழ் பெற்றது.
டாடா நிறுவனம் கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரையும் மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஜேஆர்டி டாடா இன்று நம் மத்தியில் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.
எங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் அளித்த அரசுக்கும், கொள்கைக்கும் நன்றிகள். மீண்டும் வருக, ஏர் இந்தியா” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது தொடர்பான செய்திகள் ஊடகங்களிடம் கசிந்தன. அப்போது ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஊடகத்தில் கசிந்த தகவல்கள் உண்மையென தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் 1932ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் நிறுவப்பட்டது. அரசின் வசம் உள்ள 100 சதவீத பங்குகளையும் வாங்க டாட்டா குழுமமும் ஏலம் கோரியிருந்தது. 1950களில் டாடா குழுமம் ஒன்றிய அரசுக்கு தனது பெரும்பான்மை பங்குகளை விற்ற பின்பு ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனமானது.
இந்நிலையில் 68 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு திரும்பியுள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 68 ஆண்டுகள் கழித்து டாடா வசமானது ஏர் இந்தியா