ஜூனாகத் (குஜராத்): இந்தியாவின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட விளைவின் காரணமாக, மற்றொரு துயரச் சம்பவமாக, குஜராத்தின் ஜூனாகத் நகரில் இன்று (ஜூலை 24) பிற்பகல் இரண்டு பழமையான இரண்டு மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 4 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், கடைகள் மற்றும் குடியிருப்புகள் அடங்கிய இந்த கட்டடம் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், புல்டோசர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் இடர்பாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.