பிகார் மாநிலத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பூரண மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. அங்கு மதுபானம் விற்பதும், குடிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
இந்நிலையில், பிகார் மாநிலம் சஹர்சாவில் உள்ள காவல் நிலையத்திற்கு, காவல் துறை தலைவர் பிரனவ் குமார் பிரவீன் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உதவி காவல் ஆய்வாளர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலைய பொறுப்பாளரிடம் டிஐஐி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சர்தர் மருத்துவமனையில் உதவி காவல் ஆய்வாளருக்கு நடத்தப்பட்ட சோதனையில், மது அருந்தியிருந்தது உறுதியானது. இதுகுறித்து விளக்கமளிக்குமாறு உதவி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, காவல் துறை அலுவலர்கள் மதுபோதையில் காணப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடுமையாக காயமுற்ற மம்தா பானர்ஜி- மருத்துவ அறிக்கை பகீர்!