ஜார்க்கண்ட்: தன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் மாமியார் தான் ஆண் குழந்தை பெறாததால் தன்னை தொடர்ந்து சித்ரவதை செய்துவருவதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரத் பர்வேன் எனும் இந்தப்பெண்மணி நாயா பஜார் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 2010ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்திலுள்ள அசன்சோலில் திருமணம் நடந்தேறியது. அத்துடன் பர்வீனின் வாழ்வில் துயரமும் தொடங்கியது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி இஸ்ரத் பர்வீன் கூறுகையில், “எனக்கு 2010இல் திருமணம் ஆனது. அதன் பின் 2011இல் எங்களுக்கு ஓர் பெண் குழந்தை பிறந்தது. அதனால் என் மாமியார் ஆண் குழந்தை பெற்றுத் தரும்படி என்னை கொடுமை செய்யத்தொடங்கினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு பிறந்த மற்றுமொரு பெண்குழந்தையால் எனக்கு நிகழ்ந்த கொடுமை மேலும் அதிகரிக்க, அதன் பின் மூன்றாவதும் பெண் குழந்தையே எனக்குப் பிறக்க என் மாமியாரின் கொடுமை உச்சத்தைத் தொட்டது. நான் அவர்களின் வீட்டை விட்டும் விரட்டி அடிக்கப்பட்டேன். தற்போது எனக்கு நீதி வேண்டும். இது குறித்து காவல்துறையினரிடம் புகாரும் அளித்துள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: குஜராத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வேலூர் திருட்டுக் கும்பல்!..