டெல்லி : ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஆட்டோ மோதி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சமர்பித்தது.
இந்நிலையில் நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர்.
தன்பாத் நீதிபதி கொலை- உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
அப்போது, “உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா சிபிஐ, உளவுப் பிரிவு காவலர்கள், காவலர்கள் என நீதிபதிக்கு பாதுகாப்பு அளிக்க யாருமில்லை, மாநில அரசு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை.
தன்பாத் மாஃபியா, குண்டர்கள் நிறைந்த பகுதி எனக் கூறினார். மேலும் நீதிபதிகள் தாக்கப்படுவது மற்றும் அச்சுறுத்தப்படுவது தொடர்கிறது என்றும் கூறினார்.
முன்னதாக இந்த வழக்கில் இந்திய தலைமை வழக்குரைஞர் கேகே வேணுகோபால் பல்வேறு காலக்கட்டங்களில் நீதிபதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து வெளியான செய்தித்தாள்களை சமர்பித்தார்.
இதையும் படிங்க : தன்பாத் நீதிபதி கொலை வழக்கு- சிபிஐக்கு மாற்றம்!