டெல்லி: விமான நிலையங்களில் கரோனா விதியை மீறுபவர்களிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளை மீறும் பயணிகளுக்கு 'ஸ்பாட் அபராதம்' விதித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய சிவில் விமான ஒழுங்குமுறை விமான நிலைய இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து விமான நிலையங்களிலும் பணிபுரிபவர்கள் கோவிட் -19 நெறிமுறையின் அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். இதனை விமான நிலைய அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.