புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்காவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆய்வு செய்தார். பூங்காவில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினருக்கு தூய்மைப்படுத்தும் பணிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அழைப்பை ஏற்று வந்திருந்த தன்னாவ அமைப்பினருடன் தாவரவியல் பூங்காவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தூய்மைப்படுத்தினார்.
இதையடுத்து அவர் சுமார் இரண்டு மணிநேரம் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இப்பணி ஒருவாரம் நடைபெறும்.
இதில், ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிம்ஸ் மருத்துவக் கல்லூரி, செயின்ட் பேட்ரிக் பள்ளி, இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி, தந்தைப் பெரியார் அரசு உயர் நிலைப் பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு உயர் நிலைப் பள்ளி, அன்னை சிவகாமி அரசு உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 140க்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாணவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்திரா காந்தி அரசு உயர் நிலைப் பள்ளி, அன்னை சிவகாமி அரசு உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 140க்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'மீண்டு வா நண்பா'- சச்சினை வாழ்த்திய விவியன் ரிச்சர்ட்ஸ்!