கடந்த சில மாதங்களாகவே தலைநகர் டெல்லியில் பனி மற்றும் புகைமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், டெல்லியின் தட்பவெட்ப நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு 50 மீட்டர் தொலைவில் உள்ள தூரத்தை பார்க்க முடியாத அளவிற்கு அடர்ந்த புகைமூட்டம் காணப்படுகிறது.
குறிப்பாக, அங்குள்ள சஃப்தார்ஜங் பகுதி புகைமூட்டம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லிக்கு வடக்கே உள்ள இமயமலை பகுதியில் பனிப்பொழிவுத் தொடங்கியுள்ளதால், டெல்லியில் மீண்டும் கடுங்குளிருக்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தட்பவெட்பம் 1.1 டிகிரி அளவிற்கு குறைந்து பதிவானது. 1935ஆம் ஆண்டில் மைனஸ் 0.6 டிகிரி பதிவானதே மிகவும் குறைந்தபட்ச வெப்ப நிலையாகும்.
இதையும் படிங்க: கோவிட்-19 ரிப்போர்ட் இல்லயா? கவர்னருக்கு நோ எண்ட்ரி சொன்ன கோயில்!