டெல்லி: ஹரியானாவைச் சேர்ந்த தம்பதியினர், ஒரு ஆண்டுகூட சேர்ந்து வாழாமல், மனம் ஒத்து பிரிய முடிவு செய்து, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துகோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், "தங்களது தாம்பத்திய உறவு ஆரோக்கியமாக இல்லை என்றும், குழந்தையும் இல்லை என்றும்; இதனால் கொடுமையான இல்லற வாழ்விலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இந்து திருமண சட்டப்படி தம்பதியினர் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே, விவாகரத்து பெற முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மனுதாரர்களில் ஒருவரான மனைவி குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், "தாம்பத்திய உறவில் திருப்தி இல்லை என்பது விவாகரத்து பெற சரியான காரணம் என்றாலும், இதை வைத்து சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், தம்பதியினர் பிரிந்து ஓராண்டு காலம் நிறைவடைந்த பிறகு, இருவரும் தனித்தனியாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 'ஹாலிடே கார்னிவல்'