கோவா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சியும் பெரும்பான்மையை நெருங்க முடியாத நிலையில், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகளின் சார்பில் வென்றவர்களை நோக்கி பெரிய கட்சிகள் வலை வீசி வருகின்றன.
பாஜகவிலிருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் லக்ஷமி காந்த் பர்சேகர் மன்ரேம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
பெரும்பான்மையை நெருங்காத பெரிய கட்சிகள் சுயேட்சைகளை அணுகும் நிலையில், பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தன்னை ஏமாற்றி விட்டதாக லக்ஷமி காந்த் பரசேகர் தெரிவித்துள்ளார். தான் வெற்றி பெற்றால் கோவா மக்களின் விருப்பப்படியே செயலாற்றுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உ.பியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் யோகி ஆதித்யநாத்...