டெல்லி சாகர் பூர் பகுதியில் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சாகர் பூர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், "இந்த கொலை சம்பவம் மதியம் 2.00 மணியளவில் நடந்துள்ளது. அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டபோது, ஒருவர் கத்தியால் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர்.
முதல்கட்ட தகவலில், அந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை செய்துவருகிறோம். தப்பியோடியவரை தீவிரமாக தேடிவருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வழிப்பறியை தடுக்கு முயன்ற பெண் காவருக்கு கத்திக்குத்து... குற்றவாளிகக்கு ஓராண்டு சிறை...