கரோனா தொற்று நாடெங்கும் அதிகளவில் பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இச்சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து உத்தம் நகர் காவல்துறையினர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் மீனாவுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "தன்னிடம் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீயணைப்பு இயந்திரத்தை தந்து ஏமாற்றிவிட்டனர் என கீதா அரோரா என்ற பெண் புகார் அளித்ததை அடுத்து நாங்கள் விசாரணையை தொடங்கினோம்." என்றார்.
இதையடுத்து காவல்துறையினர் கால் டீடைல் ரெக்கார்டின் உதவியோடு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கையும்களவுமாகப் பிடித்து அவர்களிடம் இருந்த ஐந்து தீயணைப்பு இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். அஷுதோஷ், ஆயுஷ் என்னும் அந்த இரு நபர்களும் விகாஸ் புரி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதையும் படிங்க: தேர்தல் பணியில் ஈடுபட்ட 577 ஆசிரியர்கள் உயிரிழப்பு